பொன்மொழிகள்

பால் எங்ஙனம் தனிப்பாலாகவே தோன்றிப் பின்னர் விற்பனையாளரின் பேராசையால் தண்ணீர் கலக்கப்படுமோ, அங்ஙனமே தமிழும் முதற்கண் தனித்தமிழாகவே தோன்றிப் பின்னர் ஆரியரின் பொறாமையால் வடசொற் கலக்கப்பட்டது.

செம்மொழி

        தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கோவை மாநகரில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ 2010-ஆம் ஆண்டு சூன் மாதம் 23 முதல் 27 வரை நடைபெற்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தமது 60 ஆண்டுக்கால ஆராய்ச்சியின் முடிவாகத் தமிழ் மொழியே உலகத் தமிழ்ச் செம்மொழி என 1966-ஆம் ஆண்டே தாம் எழுதிய ஆங்கில நூல் (The Primary Classical Language of the World) வாயிலாக அறிவித்தார். ஆயினும், அப்பெருமகனார்க்குச் செம்மொழி மாநாட்டில் அரசு சிறப்புச் செய்யாதது குறித்து தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.