பொன்மொழிகள்

தமிழ், திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகக் குமரிக்கண்டத்தில் தோன்றிய உலகமுதல் உயர்தனிச் செம்மொழி.

பாவாணர்க்குச் சிலை

        தமிழ் நெஞ்சங்களால் மொழிஞாயிறு என்று போற்றப்படும் மொழிப் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். தமிழ்மொழி வளம் பெறவும் தமிழ் மக்கள் நலம் பெறவும் தமது வாழ்நாள் முழுதும் அரும்பாடுபட்டவர் பாவாணர்.

        அப்பெருமகனார்க்கு முழுவுருவச் சிலை யொன்று, அவர் நீண்ட காலமாக வாழ்ந்த சென்னை மாநகரில் தகுந்த இடத்தில் நிறுவப்பட வேண்டுமென்ற ஏக்கம் பாவாணர் குடும்பத்தாராகிய எங்களுக்கும் தமிழன்பர்கள் அனைவர்க்கும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

        எனவே, நூற்றாண்டைக் கடந்துள்ள பாவாணர்க்குச் சென்னையில் முழுவுருவச் சிலை அமைக்கும்படியாக உலகெங்கிலுமுள்ள தமிழ் இயக்கங்களும் அவரது பற்றாளர்களும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தால், அக்கனவு நனவாகும் என்பது திண்ணம்.